தேவையான பொருள்கள்
பீட்ரூட் - 150 கிராம்
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 3
செய்முறை
பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் சீவி துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் துருவி வைத்துள்ள பீட்ரூட், உப்பு,சேர்த்து வேகும் வரை நன்றாக கிளறி விடவும்.
நன்கு வெந்ததும் , தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.. சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி.

No comments:
Post a Comment