Wednesday, 15 August 2018

வேப்பிலையை பயன்படுத்தக் கூடிய 10 வழிகள்


1. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

வேப்பிலை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. அதில் உள்ள ஆன்டிபேக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் குணங்களை முழுமையாக பெற அதனை டீ வடிவில் அருந்தலாம். சில வேப்பிலைகளை நசுக்கி அதனை வெதுவெதுப்பான நீரில் போட்டு அதனை அருந்துங்கள். இதன் மூலம் உங்களது பொதுவான உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

2. உடலில் இருந்து நச்சுக்களை நீக்க

நச்சுக்களை நீக்குவதில் சிறப்பு பெற்றது அது. இதில் கசப்பு தன்மை அதிகம் உள்ளதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுறுசுறுப்பாக்கி நச்சுக்களை நீக்க செய்கிறது. வேப்பிலையை பொடி செய்து பசு நெய்யில் கலந்து சாப்பிடலாம். அல்லது வேறு வடிவிலும் எடுத்துக் கொண்டால் உடலில் இருந்து நச்சுக்களை நீக்கலாம்.


3. இரத்தத்தில் ஆரோக்கியமான அளவு சக்கரை அளவை பராமரித்தல்

வேப்பிலை உங்களது சக்கரை அளவினை சீராக்குவதில் உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? இரத்தத்தில் உள்ள இன்சூலினின் பணிகளை சீராக்கி உடலுக்கு சரியான அளவு இன்சூலின் கிடைக்க செய்கிறது. எனவே, வேப்பிலையை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயுள்ளவர்கள் இன்சூலினை நம்பி இருப்பதை குறைக்கிறது. எனினும், மருத்துவரை கலந்தாலோசித்து அதனை உட்கொள்ள வேண்டிய அளவு மற்றும் பிற விஷயங்களை அறியவும்.

4. இரைப்பைக்குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

வேப்பிலை இரைப்பைக்குடலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்தும், அல்சர்களை சரி செய்யும், உப்புசம், வயிற்று பிடிப்பு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று இன்பெக்க்ஷனை தடுக்கிறது. செரிமானம் மற்றும் கழிவு பொருட்கள் வெளியேற்றத்தையும் சீராக்கும்.

5. கீல்வாதத்தை சரி செய்யும்

அழற்சியை குணப்படுத்தும் குணநலன்களை கொண்டுள்ளதால் வேப்பிலை கீல்வாதத்தை குணப்படுத்த உதவுகிறது. வேப்பிலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அல்லது பேஸ்ட்டை வலியுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகளில் தடவினால் வலியும் வேதனையும் குறையும்.

6. வாய் ஆரோக்கியத்தை தரும்

வேப்பிலை வாய் ஆரோகியத்துக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களில் பயன்படுத்தப்படும். பேக்டீரியாவை எதிர்க்கும் தன்மை வேப்பிலையில் உள்ளதால் பற்களில் தோன்றும் நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவற்றை அது சரி செய்கிறது. வேப்பிலை நீரை மவுத்வாஷ் ஆக பயன்படுத்தலாம். வேப்பிலை குச்சிகளையும் டூத்பிரஷ் ஆக பயன்படுத்தலாம்.

7. காதுகள்/கண்களில் தோன்றும் சிறு பிரச்சனைகளை சீராக்கும்

பிஞ்சு வேப்பிலைகளை சுடு நீரில் இட்டு அதனை முழுமையாக ஆற வைக்கவும். இந்த நீரை கொண்டு உங்களது கண்களை கழுவினால் கண்ணெரிச்சல், கண் சிவந்து போதல் மற்றும் சோர்வு ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம். சில இலைகளை அரைத்து அதனை காதுகளில் ஏற்படும் கட்டிகளில் பூசினால் குணமடையலாம்.

8. அனைத்து வகை சரும பிரச்சினைகளையும் சரி செய்யும்


ஒரு கப் வேப்பிலைகளை நீரில் கொதிக்க வைத்து அவை நிறம் மங்கி மென்மையானதும் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து ஆற வைக்கவும். தினசரி நீங்கள் குளிக்கும் நீரில் இந்த வேப்பிலை நீரை சிறிது கலந்து குளித்து வந்தால், சரும இன்ஃபெக்க்ஷன், பருக்கள் மற்றும் உடல் துற்நாற்றம் ஆகியவற்றை சரி செய்யலாம். சில இலைகளை நீர் சேர்த்து அரைத்து அதனை ஃபேஸ் பேக் மூலம் முகத்தில் பூசி வந்தால் பருக்கள் நெருங்காது. பொதுவாக வேப்பிலைகளை அரைத்து அந்த பேஸ்டை பூசுவதால் காயங்கள் குணமடைவதுடன் இன்ன பிற சரும பாதிப்புகளும் நீங்கும். வேப்பிலை நீர் ஒரு சிறந்த ஸ்கின் டோனர் ஆகும். அதனை பயன்படுத்தினால் நோய் தொற்றுக்கள் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் குணமடையும்.

9. கூந்தலில் தோன்றும் பிரச்சினகளை சரி செய்யும்


வேப்பிலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அது ஆறியதும், அதனை கொண்டு தலைமுடியை அலசவும். இதிலுள்ள பேக்டீரியா எதிர்ப்பு சக்தி கூந்தலில் உள்ள பேன்கள், பொடுகு, உச்சந்தலை காய்ந்து போதல், முடியுதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சினைகள் குணமாகும். அது உங்களது கூந்தலை மென்மையாக்கி பளபளப்பாக்கும்.

10. பூச்சிகளை விரட்டும்


வேப்பிலை அனைத்து வகையான பூச்சிகளையும் விரட்டும் சக்தி கொண்டது. வேப்பிலை நீரில் முக்கிய பஞ்சினை உங்களது ஜன்னலுக்கு அருகில் வைத்தால் அல்லது வேப்பிலையை கொளுத்தினால் பூச்சிகள் அண்டாது. கொசுக்களை விரட்ட இது ஒரு இயற்கையான வழியாகும்.

குறிப்பு: வேப்பிலை ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாகும் எனவே இதனை சிறு குழந்தைகள் மற்றும் வயதில் குறைந்தவர்களுக்கு பயன்படுத்த கூடாது. மேலும் கர்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சினைகள் கொண்டவர்கள் இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது

காரைக்குடி சிக்கன் கறி | Karaikudi Chicken Curry



காரைக்குடி சிக்கன் கறி சமைக்க தேவையானவை

 {6}காய்ந்த மிளகாய்
 வெங்காயம் ஒன்று (பெரியது)
 சிக்கன் அரை கிலோ
 {2} கொத்து கறிவேப்பிலை
 {2}தக்காளி
 சோம்பு கால் தேக்கரண்டி
 (தாளிக்க) உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
 {2} பச்சை மிளகாய் (அ) மிளகு {2} தேக்கரண்டி
 {2} தேக்கரண்டி சாம்பார் பொடி / மிளகாய் தனியா தூள் கலவை
 மஞ்சள் தூள் சிறிது அரைக்க:
 {2} தேக்கரண்டி (விரும்பினால்) இஞ்சி, பூண்டு விழுது
 சீரகம் ஒரு தேக்கரண்டி
 மிளகு ஒரு தேக்கரண்டி
 மராத்தி மொக்கு சிறிது
 பட்டைஒரு துண்டு
 {4}ஏலக்காய்
 {5} கிராம்பு
 கால் பாகம் ஜாதிக்காய்
 {8} கொத்துகறிவேப்பிலை
 {4} மேசைக்கரண்டி தேங்காய் துருவல்


உணவு செய்முறை : காரைக்குடி சிக்கன் கறி

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ளவற்றில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும்.

அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும். ஆறியதும் முதலில் பொடியாக அரைத்து பின்பு தேவைக்கேற்ப நீர் விட்டு நைசாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும். .

கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். (பச்சை மிளகாய் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம்). அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி குழைய வதங்கியதும் சாம்பார் பொடி அல்லது மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும். .

தூள் வாசம் போனதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும். (நீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனிலிருந்து வரும் நீர் மசாலாவோடு கலந்து மீண்டும் சிக்கன் அதை முழுவதுமாக இழுத்துவிடும். இவ்வாறு செய்வதால் சிக்கனுடன் மசாலா சேர்ந்து நன்றாக ஊறி இருக்கும்). சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும். .

பச்சை வாசம் போகக் கொதித்து எண்ணெய் பிரியும் போது சிறிது கறிவேப்பிலை மற்றும் மிளகு தூள் (விரும்பினால்) சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சுவையான காரைக்குடி சிக்கன் கறி தயார். .

Tuesday, 14 August 2018

ராயப்பேட்டை மட்டன் பிரியாணி



தேவையானவை :

மட்டன் கலவைக்கு :

1. மட்டன் – 400 கிராம்

2, தயிர் – 1 டேபிள்ஸ்பூன்

3. மிளகாய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

4. மல்லி தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

5. இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

6. உப்பு – 1/2 டீஸ்பூன்

மேற்கூறிய அனைத்தையம் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

மற்ற தேவையான பொருட்கள் :

1. பாசுமதி அரிசி – 2 கப் (கால் மணி நேரம் ஊற வைத்து, வடித்துக்கொள்ளவும்) 

2. நெய் – 1 டேபிள்ஸ்பூன்

3. எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்

4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1

5. நீளவாக்கில் நறுக்கிய தக்காளி – 1

6. இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்

7. மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்

8. மல்லி தூள் – 1 டேபிள்ஸ்பூன்

9. கரம் மசாலா – 1 டீஸ்பூன்

10. தயிர் – 1 டேபிள்ஸ்பூன்

11. கொத்தமல்லி மற்றும் புதினா – ஒரு பிடி

தாளிக்க:

1. பட்டை – 1

2. கிராம்பு – 3

3. அன்னாசிபூ- 1

4. பிரியாணி இலை – 1

5. கல்பசி – கொஞ்சம்

செய்முறை:

1. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் கலந்து ஊற்றவும். தாளிக்க கொடுக்கபட்டுள்ள பொருட்களை 30 முதல் 40 நொடிகள் குக்கரில் தாளிக்கவும். இஞ்சி பூண்டு விழுதை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வெங்காயம் போட்டு வதக்கவும்.

2. மிளகாய், மல்லி, கரம் மசாலா பொருட்களை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்பொழுது கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும் பிரியாணி வாசனை கூட்டுவதற்காக தயிர் சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இக்கலவையை அடி பிடிகாமல் அடிகடி கிளறவும்.

3. இப்பொழுது மூன்று முக்கால் கப் தண்ணீர் ஊற்றவும் இக்கலவையை இரண்டு நிமிடம் சமைக்கவும். இப்பொழுது தனியாக ஒரு வானலி வைத்து அதில் எண்ணெய் உற்றவும். எண்ணெய் சூடான பிறகு, மட்டன் போட்டு 5 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இந்த மட்டன் குக்கரில் சேர்க்கவும்.இத்துடன், பாசுமதி அரிசி சேர்த்து 15 நொடிகள் கிளறி குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான ராயப்பேட்டை பிரியாணி ரெடி. வும்.


புல்ஸ் ஐ ஆப்பம் -Bulls Eye Appam


தேவையானவை : 

ஆப்பத்துக்கு : 

1. பச்சரிசி அரிசி – 1/2 டம்ளர்

2. புழுங்கல் அரிசி – 1/2 டம்ளர்

3. அவல் – ஒரு மேசை கரண்டி

4. ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி

5. உளுந்து – ஒரு மேசைகரண்டி

6. உப்பு – 3/4 தேக்கரண்டி

7. ஆப்ப சோடா – 1/4 தேக்கரண்டி

8. தேங்காய் – நான்கு பத்தை துருவியது

9. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

புல்ஸ் ஐக்கு :

1. முட்டை – 3

2. மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப

3. உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, பச்சரிசி ஆகியவற்றுடன், அவல் ,உளுந்து, ஜவ்வரிசி, வெந்தயத்தை சேர்த்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு துருவிய தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு சோடாமாவு போட்டு எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.

2. ஆப்ப சட்டியை காயவைத்து வெங்காயத்தை பாதியாக அரிந்து ஃபோர்க்கில் குத்தி எண்ணை சிறிது விட்டு சுற்றிலும் தேய்க்கவும். அப்பதான் ஆப்பம் ஒட்டாமல் பிஞ்சி போகாமல் வரும். ஒரு குழிகரண்டி ஆப்பமாவை உற்றி சுழற்றி விடவும்.

3. ஒரு முட்டையை கலக்காமல் அப்படியே ஊற்றி மேலும் சிறியதாக சுழற்றிவிட்டால் வெள்ளை கருமட்டும் எல்லா மாவிலும் படும். பிறகு மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும் நல்ல முக்கால் பாகம் வெந்து வரும் போது மிளகு உப்பு தூவி இறக்கினால் சுவையான, சத்தான புல்ஸ் ஐ ஆப்பம் ரெடி....

ஆட்டுக்கால் மிளகு குழம்பு - Pepper broth of sheep




தேவையானப் பொருட்கள்:

தாளிக்க :

எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி

பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு

கொத்துமல்லித்தழை - சிறிது

புதினா - சிறிது


வேகவைக்க :

ஆட்டுக்கால் - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 2 

பச்சை மிளகாய் - 2

மஞ்சள்தூள் - தே. அளவு 

இஞ்சி பூண்டு விழுது - தே. அளவு 

மிளகு தூள் - தே. அளவு 

மிளகாய்த்தூள் - தே. அளவு

மல்லித்தூள் - தே. அளவு 

தேங்காய்ப் பால் - தே. அளவு 

பாதாம் - தே. அளவு 

மிளகுத்தூள் - தே. அளவு 

உப்பு - தேவையான அளவு


செய்முறை:


1. ஆட்டுக்காலை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2. பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து தேங்காய்ப் பாலுடன் சேர்க்கவும்.

3. சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் வேகவைக்க தேவையான பொருள்களைச் சேர்க்கவும்.

4. ஆட்டுக்காலை அனைத்து மசாலாக்களுடனும் சேருமாறு நன்கு பிசறி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

5. குக்கரில் நான்கு குவளை (டம்ளர்) தண்ணீர் அல்லது ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி கொதிக்க விடவும்.

6. கொதி வந்ததும் குக்கர் மூடியைப் போட்டு வெயிட் போட்டு தீயை நடுத்தரமாக எரியவிடவும். இல்லையென்றால் குழம்பு தெறிக்கும். நான்கு அல்லது ஐந்து விசில் வரை வேகவிடவும். பிறகு தீயை குறைத்து (சிம்மில்) வேகவிடவும். ஆட்டுக்கால் இளசானதாக இருந்தால் 20 நிமிடத்திலும் இல்லையென்றால் 30 நிமிடத்திலும் வெந்துவிடும்.

7. வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் பாதாம் கலவையை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும். பிறகு ஒரு கரண்டி மிளகு தூள் சேர்க்கவும்.

8. தனியே தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்கால் குழம்பில் சேர்த்து இறக்கவும்.

சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா, இட்லி, இடியாபம், தோசை, ஆப்பம், நெய் சோறு ஆகிய அனைத்திற்கும் இதை தொட்டு கொள்ளலாம்.

Monday, 13 August 2018

வாழைப்பூ வடை


தேவையானவை


வாழைப்பூ – 2கப்
கடலைப்பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – அரை கப்
உளுந்தம் பருப்பு – அரை கப்
காயந்த மிளகாய் – 7
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கு
தேங்காய் – அரை மூடி
எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை:

பருப்பு வகைகளை மிளகாயுடன் ஊறவைத்து உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்,தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து, வாழைப்பூவை கலந்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.




Banana fodder


INGREDIENTS


Banana - 2 cups
Honey - 1 cup
Turmeric - half cup
Gum dal - half cup
Wounded chili - 7
Greengrouth - 1 spoon
Curry powder - for need
Coconut - half cover
Oil, salt - for need

Method:

Add chilli powder and chilli powder, salt, curry leaves, coconut, coconut, grate and add banana. Wipe the oil on the walnut and grind it into flakes.

லெமன் சர்பத்


தேவையானவை:

எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்.

 உப்பு - 1/4 ஸ்பூன்.

தண்ணீர் - 1 தம்ளர்.

நன்னாரி எசன்ஸ் - 1 துளி.

செய்முறை:

தண்ணீரில்  உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். இவற்றில் எலுமிச்சைச் சாறு, நன்னாரி எசன்ஸ் சேர்த்து குளிர வைத்துப் பின் அருந்தவும்.

Lemon Juice


Requirements:

Lemon juice - 2 spoon.

 Salt - 1/4 spoon.

Water - 1 Thamar.

Nannary Essence - 1 drop.



Method:

Add salt in water and dissolve. These include lemon juice, nannary eshens, and then cool.