Monday, 13 August 2018

கேரளா முட்டை அவியல்


தேவையான பொருட்கள்:

அவித்த முட்டைகள் - 4
தேங்காய் எண்ணெய் - 2  ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை உப்பு -தேவையான அளவு

அரைப்பதற்கு 

தேங்காய் - அரை கப்
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த  மிளகாய் - 3
சீரகம்   - 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் -கால்  ஸ்பூன்


செய்முறை:

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை மிக்சியில் போட்டு  சிறிது தண்ணீர்  சேர்த்து சிறிது கெட்டியாக  அரைத்து கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய்  ஊற்றி,  கடுகு,  கறிவேப்பிலை சேர்த்து தாளித்துஅதில் அரைத்து வைத்த மசாலாவை போட்டு   அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி கொதிக்க விடவும்.  

பின்பு  அவித்த முட்டையை இரண்டு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் மசாலாவில் போடவும்.

பின்பு அடுப்பை   சிம்மில்  வைத்து  10   நிமிடம்  கழித்து  இறக்கவும்.  சுவையான முட்டை அவியல் ரெடி

No comments:

Post a Comment