தேவையான பொருள்கள்
நண்டு - 1 கிலோ
தேங்காய் பால் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை
இஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
சோம்பு - 1 ஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் துருவல் - அரை கப்
தாளிக்க:
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
நண்டை சுத்தம் செய்து கழுவி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
தேங்காயை சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நண்டு, தக்காளி, மற்றும் உப்பு சேர்த்து மூடிபோட்டு 15 நிமிடங்கள் வேகவிடவும்.
15 நிமிடங்கள் கழித்து மிளகாய் தூள் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் வேகவிடவும்.
அனைத்தும் சேர்ந்து நன்கு வெந்ததும், பொடித்த பொடி, தேங்காய் விழுது, மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment